"நடிகர்கள் அனைவரும் இமேஜுக்குள் சிக்கியிருப்போம்"-சூர்யா அதிரடி பேச்சு
பஹத் பாசில் நடித்துள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ என்ற படம், வரும் அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. ராஜமவுலி, அவரது மகன் கார்த்திகேயா மற்றும் பஹத் பாசில், பேபி சாரா சச்தேவ், பிரவீன் ஆண்டனி, சக்திவேலன் ஆகியோருடன் சூர்யா, தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கலந்துகொண்டனர்.
அப்போது சூர்யா பேசியதாவது: பஹத் பாசில், ராஜமவுலி, கார்த்திகேயா கூட்டணியில் இதுபோல் ஒரு படம் உருவாகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். பஹத் பாசில் என்னை அண்ணன் என்று சொன்னார். சந்தோஷம். தற்போது நாங்கள் அடைந்துள்ள நிலைக்கு எளிதாக வந்துவிடவில்லை. முட்டி உடைந்து, கால் உடைந்து, மீண்டும் எழுந்து நின்று, அதற்கு பிறகே இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். நடிகர்கள் அனைவரும் இமேஜுக்குள் சிக்கியிருப்போம். பஹத் பாசில் அப்படிப்பட்டவர் இல்லை. அவரை போல் என்னால் இருக்க முடியவில்லை. கதை நன்றாக இருக்கிறதா? கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதை மட்டுமே அவர் பார்க்கிறார்.

