சூர்யா- வெங்கி அட்லுரி படத்தின் இசைப் பணிகள் தொடக்கம்!
1745392563452
சூர்யா - வெங்கி அட்லுரி படத்தின் படத்துக்கான இசைப் பணி தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘ரெட்ரோ’ படத்துக்குப் பின், ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை முடித்துவிட்டு வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு முன்பாகவே, இசைப் பணிகளை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக வெங்கி அட்லுரி - ஜி.வி.பிரகாஷ் இருவரும் துபாய் சென்றிருக்கிறார்கள். அங்கு பாடல் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும், சில காட்சிகளுக்கான பின்னணி இசையையும் முடிவு செய்ய இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

