'வீர தீர சூரன்' பட இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா.
1749446173778

டைரக்டர் அருண்குமாரின் 'வீர தீர சூரன்' படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றி பெற்றது .இதையடுத்து அதன் இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது .அந்த நிறுவனம் சென்ற வருடம் சிவகார்த்திகேயேன் நடிப்பில் அமரன் படத்தை தயாரித்து வெளியிட்டது .அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது .அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தினை தயாரித்தது .இந்த படம் கலவையான விமரிசனத்தை சந்தித்து வருகிறது .இந்த படம் வெற்றி படமா இல்லை சுமாரான படமா என்று இனி வரும் நாட்களில் வரும் வசூலை பொறுத்து அமையும் .இந்நிலையில்
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் 'வீர தீர சூரன்' பட இயக்குனர் அருண் குமாரின் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் இதற்கு முன்பு கமலின் விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் பாத்திரத்தில் நடித்த சூர்யா ராஜ்கமல் பிலிம்ஸின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவதாக கோடம் பாக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது .