‘இதயங்களை வென்ற என் ஓமனா…”- ஜோதிகாவை வாழ்த்திய சூர்யா.

photo

மம்மூட்டி-ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘காதல் தி கோர்’. இந்த படம் குறித்து பலர் பாராட்டி பேசிவரும் நிலையில் தற்போது நடிகை ஜோதிகாவின் கணவர் சூர்யா அழகிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

photo

தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் தயாரான படம் ‘காதல் தி கோர்’. கடந்த 23ஆம் தேதி வெளியான இந்த படத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மனைவியாக ஜோதிகா நடித்துள்ளார். அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்கிறார். அதற்காக அவர் கூறும் காரணம் மிரளவைக்கிறது. தொடர்ந்து ஜோதிகாவின் கணவரான மம்மூட்டி என்ன செய்தார். இந்த சிக்கலிலிருந்து வெளி வந்தாரா என்பதே மீதி கதை.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் நடிகர் சூர்யா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார் அதில் “ அழகான மனம்கொண்ட மனிதர்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் காதல் தி கோர் போன்று படம் கிடைக்கும். இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த படக்குழுவுக்கு பாராட்டுகள். ஜியோ பேபி இயக்கத்தில் அமையான காட்சிகள் கூட அழகாபெரிய அளவில் பேசப்பட்டது.எழுத்தாளர் ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் ஆகியோர் இந்த உலகத்தை நமக்கு காட்டியுள்ளனர். காதல் என்றால் என்ன என காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி குறிப்பாக இதயங்களை வென்ற என் ஓமனாவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.  

Share this story