"உங்கள் வரவு நல்வரவாகட்டும"-சிக்மா இயக்குனரை வாழ்த்திய நடிகர் யார் தெரியுமா ?

jesan

இயக்குனராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி ஜோதிகா பதிவிட்டுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள ஆக்‌ஷன் திரில்லர் படமான இது  திரைக்கு வந்ள்ளது. இந்நிலையில், ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சிக்மா’ படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜேசன் சஞ்சய்யின் சில நேர்காணல்களை பார்க்கும்போது, மிகவும் பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக மகிழ்ச்சியை தருகிறார்.

நீங்கள் வளர்ந்து இருப்பதை பார்க்கும்போது, உங்களுக்கு கிடைக்கவுள்ள வெற்றிக்கு தகுதியானவர் என்று தோன்றுகிறது. உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும், படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். உங்களின் ‘சிக்மா’ படம்  சிறப்பாக அமையட்டும். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்கள் வரவு நல்வரவாகட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார்.

Share this story