இறுதிக்கட்டத்தை நோக்கி ‘சூர்யா 42’ அடுத்தடுத்து வெளியான சூப்பர் தகவல்.

photo

நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் அவரின் 42வது திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் எவ்வளவு நட்கள் நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் தயாராகும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீஷா பட்டானி நடிக்கிறார்.  இவர்களுடன் மிர்ணாள் தாகூர், யோகிபாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. பான் இந்தியா படமாக தயாராகும் இந்த படம் 10 மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியாகிறதுஅதுமட்டுமல்லாமல் இம்மாதம் 14ஆம் தேதி படத்தின் டைட்டில் புரொமோ வெளியாக உள்ளது.

photo

இந்த நிலையில், ‘சூர்யா42’ படப்பிடிப்பு நிறைவடைய இன்னும் 60-80 நாட்கள் இருக்கிறது என தயாரிப்பு தரப்பு தெரிவித்திருக்கிறதுமே மாதம் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this story