"பாத்ரூக்குக்குள் சென்று போதை ஏற்றி கொள்ளும் நடிகர்கள்" - பிரபல பாடகி தகவல்

suchithra

பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த் முதல் கிருஷ்ணா வரை போதை பொருள் உபயோக வழக்கில் சிக்கியுள்ளனர் .இந்த போதை விவகாரம் பற்றி பிரபல பாடகி சுசித்ரா பல பஹீர் தகவல்களை வெளியிட்டுள்ளார் .
இந்த போதை மருந்து கலாச்சாரம் கோலிவுட்டில் மும்பையிலிருந்து தான் பரவியதாக அவர் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது 
சுசித்ரா மேலும் கூறுகையில் ,சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். 1 கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார். அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை அவர் பகிர்ந்துள்ளார் .

Share this story