உருவாகிறது ‘சுழல் 2‘ வெப் தொடர்... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

suzhal

 ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘சுழல்’ வெப் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. 

‘குற்றம் கடிதல்’ மற்றும் ‘கிருமி’ படத்தின் இயக்குனர்களான பிரம்மா மற்றும் அனுசரண் ஆகிய இருவரும் இணைந்து இயக்கிய வெப் தொடர் ‘சுழல்’. இந்த வெப் தொடருக்கு ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் பிரபலமான புஷ்கர் - காயத்ரி இணைந்து கதை எழுதியிருந்தனர்.

suzhal

இந்த வெப் தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த தொடரில் கதிர் போலீசாக நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் ஓடிடித்தளத்தில் வெளியான இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு ‘சுழல்’ தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதாவது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் லொக்கேஷன் தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

 

Share this story