'சுழல் 2' வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்

suzhal

கதிர் – ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் ‘சுழல் 2’ வெப் தொடரின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, நடிகர் கதிர் மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதில் கதிருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்திருந்தனர்.இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அந்த வகையில் 'சுழல் 2' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரை, முதல் பாகத்தை இயக்கியிருந்த புஷ்கர் காயத்ரி இயக்குகிறார்.

suzhal

இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்ட மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியான நிலையில் தற்போது இதன் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி 2024 ம் ஆண்டு டிசம்பர் அல்லது 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. 'சுழல்' வெப் தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகை கவுரி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவான இந்தத் தொடர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது. மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் கிரைம் திரில்லர் கதையாக உருவான இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Share this story