கீரவாணி இசையில் ‘ஸ்வாகதாஞ்சலி’... ‘சந்திரமுகி 2’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

Chandramukhi2

‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சந்திரமுகி 2’. முன்னணி நிறுவனமான லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினி நடித்த வேட்டை கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இது குறித்து போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Chandramukhi2

இந்த படத்தில் ராகவா லாரன்ஜுடன் இணைந்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாகவும், வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்டமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Chandramukhi2

இந்த படத்திற்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ‘ஸ்வாகதாஞ்சலி’ என தொடங்கும் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சைதன்யா பிரசாத் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ளார். கங்கனாவின் அசத்தலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

Share this story