ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல்... முதல் தோற்றத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்...

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல்... முதல் தோற்றத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்...

பிரபல ஆர்ஜேவான பாலாஜி, சினிமா நடிகராகி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி சலூன் தொழிலாளியாக நடித்துள்ளார். இந்த படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஷிவானி நாராயணன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 25-ம தேதி வௌியாகிறது.

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சொர்க்கவாசல்... முதல் தோற்றத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்...

இதையடுத்து, ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் சொர்ககவாசல். ஸ்ரீதர் விஷ்வநாத் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வௌியாக இருக்கிறது. இப்படத்தின் முதல் தோற்றத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இப்படத்தின் உரிமையையும் அந்நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

Share this story