‘சுப்பிரமணியபுரம் நாயகிக்கு விவாகரத்தா?’ – வெளியான தகவல்.

photo

நடிகை ஸ்வாதி ரெட்டி விவாகரத்து செய்ய உள்ளதாக வந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

photo

தெலுங்கில் வெளியான டேஞ்சர் படத்தின் மூலமாக சினிமாதுறைக்குள் நுழைந்த ஸ்வாதி ரெட்டி தமிழில்  சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இது தவிர மலையாளமொழியிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த விமான ஓட்டியை  காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  அதர்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில்  திருமண பந்தத்திலிருந்து தற்போது சுவாதி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுவாதி தனது சமூகவலைதள பக்கத்திலிருந்து அவரது திருமண புகைப்படங்களை நீக்கியதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

photo

இதற்கு முன்னர் 2020 ஆம் ஆண்டும் இதுபோல ஒரு தகவல் பரவியது. ஆனால், அப்போது இது தவறான தகவல் என சுவாதி கடிந்துகொண்டார். இந்த முறை அப்படி எதுவும் அவர் கூறாமல்  இருப்பது கிட்டத்தட்ட விவாகரத்தை உறுதிசெய்வதாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

Share this story