'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், 'ஸ்வீட் ஹார்ட்'. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி படமான இதைத், தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.
The perfect match 💌
— YSR Films (@YSRfilms) December 5, 2024
Delighted to announce that our @5starsenthilk secures Tamil Nadu, Pondicherry, Kerala & Karnataka distribution rights to bring you #Sweetheart's sweeping romance on the big screens 📽
Music by Modern Maestro @thisisysr
Starring @rio_raj and @gopikaramesh_ pic.twitter.com/P9a1dllBYS
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதனை நடிகர் சிலம்பரசனும் யுவன் சங்கர் ராஜாவும் வெளியிட்டனர். இந்நிலையில், 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி ரிலீஸ் உரிமையை '5 ஸ்டார்' செந்தில் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.