'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்...!

rio

ரியோ ராஜ் நடித்துள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல் வெளியாகி உள்ளது. 


யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ஃபௌசி நடித்துள்ளனர். rio

அருணாச்சலேஷ்வரன் உடன் ரியோ நடித்த காமெடி காட்சிகள் மக்களிடம் மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆனது. இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது.

Share this story

News Hub