விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் நடிகை தபு?

thabu

விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தி நடிகை தபு, இதில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறதுthabu

Share this story