ஆசைதான் நம்ம லைஃப்பை தீர்மானிக்கிறது - சித்தார்த்தின் ‘டக்கர்’ டிரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி !

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கர்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகராக இருக்கும் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’. காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் சித்தார்த் நடித்தள்ளார். இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. பணக்காரனாக ஆக துடிக்கும் ஒரு இளைஞன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. சித்தார்த்தின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to share #Takkar Trailer - https://t.co/0VbOAbZVw7
— VijaySethupathi (@VijaySethuOffl) May 21, 2023
Congrats team.
Directed by @Karthik_G_Krish
??#Siddharth #TakkarFromJun9@PassionStudios_ @iYogiBabu @itsdivyanshak @nivaskprasanna @editorgowtham @Sudhans2017 @thinkmusicindia @jayaram_gj @DoneChannel1 pic.twitter.com/3fwU9gx7mZ