ஹிட்லர் திரைப்படம் குறித்து படக்குழு பேச்சு

ஹிட்லர் திரைப்படம் குறித்து படக்குழு பேச்சு 

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் தனா எழுதி இயக்கிவரும் படம் ‘ஹிட்லர்’. இந்த படத்தில் முதல் முறையாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார். கதாநாயகியாக ரியா சுமன் இணைந்துள்ளார். பொலிடிகல் திரில்லராக  தயாராகவுள்ள இந்த படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கின்றனர். நவீன் குமார் செய்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி  உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகி உள்ளது.

ஹிட்லர் திரைப்படம் குறித்து படக்குழு பேச்சு 

இந்நிலையில் இப்படம் குறித்துபேசிய இயக்குநர் தனா, இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வேறு அனுபவத்தை தரும். அதிகார மட்டத்திற்கு எதிராக எளியவன் போர்க்கொடி தூக்குவதே, இப்படத்தின் கரு என தெரிவித்துள்ளார். 

Share this story