‘வீர தீர சூரன்’ வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை

vikram

‘வீர தீர சூரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியினை முடிவு செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன்’. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதன் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. ஜனவரி வெளியீடு என்று மட்டும் டீஸரில் குறிப்பிட்டு இருந்தார்கள். தற்போது ஜனவரி 30-ம் தேதி வெளியிடலாம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளரிடம் பேசியிருக்கிறார். அவரோ இறுதிகட்டப் பணிகள் எப்போது முடிவடையும் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் வெளியீட்டுத் தேதியினை முடிவு செய்து அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ‘வீர தீர சூரன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார்.ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். அருண்குமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

Share this story