தமன்னா - விஜய் வர்மா விரைவில் திருமணம்

தமன்னா - விஜய் வர்மா விரைவில் திருமணம்

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அப்படத்திலிருந்து தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான ‘காவாலா’ நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார். 

தமன்னா - விஜய் வர்மா விரைவில் திருமணம்

இதுதவிர பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தீவிரமாக காதலித்து வரும் தமன்னா விரைவில் அவரை திருமணமும் செய்யவுள்ளார். இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story