பிரபல நடிகருடன் காதலா ?... கடுப்பான நடிகை தமன்னா !

tamanna bhatia and vijay varma

பிரபல நடிகரை காதலிப்பதாக வந்த தகவலுக்கு நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார். 

tamanna bhatia and vijay varma

சில வருடங்களால் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோன்று தெலுங்கில் ‘போலே சூடியன்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை, நடிகை தமன்னா காதலிப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. 

tamanna bhatia and vijay varma

இது குறித்து சமீபத்தில் நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளேன். அதற்குள் இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளை சில நபர்கள் பரப்பி வருகின்றனர். அதனால் இந்த விஷயத்திற்கு விளக்கமளிக்க அவசியமில்லை. சினிமா உலகில் நடிகர்களை விட நடிகைகள் இதுபோன்று காதல் கிசுகிசுக்களில் சிக்குகிறார்கள். எதனால் இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.

 

 

Share this story