மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக தமன்னா.. எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னடர்கள்...!

tammanna

மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.


100 சதவீதம் சந்தன எண்ணெயை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே சோப்பு என்று கூறப்படும் மைசூர் சாண்டல் சோப் 1916 முதல் கிடைக்கிறது. அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் நிலையான தேவையை பூர்த்தி செய்ய, தினமும் சுமார் 10 முதல் 12 லட்சம் சோப்புகளை உற்பத்தி செய்கிறது. எம்.எஸ். தோனி ஒரு காலத்தில் சோப் பிராண்டின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார்.இதற்கிடையே, சமீபத்தில் மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ரூபாய் 6.20 கோடி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.tammanna
 
எதிர்ப்புக்கு காரணம், அரசின் தயாரிப்பான மைசூர் சாண்டல் சோப்பிற்கு கன்னட நடிகர்கள், நடிகைகள் இல்லாமல், பாலிவுட் நடிகையான தமன்னாவை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கூறி எதிர்த்து வருகின்றனர். கன்னட அமைப்புகளும் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவிற்கு பதிலாக கன்னட நடிகர், நடிகர்களை தேர்வு செய்திருக்கலாம் என்று கூறியுள்ளன.

Share this story