ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதரானார் 'மில்க் பியூட்டி தமன்னா'.

photo

பிரபல நடிகையான தமன்னா ஜப்பான் நாட்டில் புகழ்பெற்ற ஷிசிடோ என்ற அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

photo

பான் இந்திய நடிகையான தமனாவுக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என ரவுண்ட் கட்டி நடித்து வரும் தமன்னாவின் கிக் ஏற்றும் ஆட்டத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதில் தமன்னா ஆடிய ஆட்டத்தை பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம். பலரும் அதே நடன அசைவை ரீல்ச் செய்து வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் ஜப்பானின் புகபெற்ற ஷிசிடோ எனும் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக இந்திய நடிகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

photo

இந்த தகவல் அவரது ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளது. தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

Share this story