‘கதாபாத்திரமாக மட்டும் பாருங்கள்’- வயதை வைத்து விமர்சிப்பவர்களுக்கு தமன்னா பதிலடி.

photo

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார் நடிகை தமன்னா. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.  அதேப்போல சிரஞ்சீவியுடன் இணைந்து ‘போலா சங்கர்’ எனும் படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் அடுத்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ்ஸாக உள்ளது. இந்த நிலையில் தமன்னாவின் வயதிற்கு எப்படி இரண்டு  சீனியர்கள் அதுவும் வயதானவர்களுடன் இணைந்து நடிக்கிறார்? எப்படி அவர் ஒப்புக்கொண்டார்?  என நெட்டிசங்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

photo

இந்த மாதிரியான கமெண்டிற்கு தமன்னா தக்க பதிலடி கொடுத்துள்ளார். “ சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு இடையில் எதற்கு வயது வித்தியாசம் பார்க்கிறீர்கள், நடிப்பை கதாபாத்திரமாக மட்டும் பாருங்கள். என்னை பொறுத்தவரை திறமையான சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Share this story