மஹத்தின் முதல் பாலிவுட் திரைப்படம் : ‘Double XL’ ஐ கண்டுகளித்த சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள்..

மஹத்தின் முதல் பாலிவுட் திரைப்படம் :  ‘Double XL’ ஐ கண்டுகளித்த சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள்..

பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள நடிகர் மஹத்தின், ‘டபுள் எக்ஸ் எல்’ படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் சிம்பு உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கண்டு களித்தனர்.  

மஹத்தின் முதல் பாலிவுட் திரைப்படம் :  ‘Double XL’ ஐ கண்டுகளித்த சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள்..

மாநாடு, மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மஹத் ராகவேந்திரா.  அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமான மஹத்   தற்போது  பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார்.   Double XL என்னும்  திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியிருக்கிறார்.  டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ் மற்றும் ரெக்லைனிங் சீட்ஸ் ஆகிய  நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தயாரித்துள்ள Double XL திரைப்படம்,  காமெடி கலந்த டிராமா திரைப்படமாக உருவாகியுள்ளது.

மஹத்தின் முதல் பாலிவுட் திரைப்படம் :  ‘Double XL’ ஐ கண்டுகளித்த சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள்..

  சத்திரம் ரமணி இயக்கியுள்ள இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியானது. உடல் பருமனான இரண்டு பெண்களும் அவர்களின் விளையாட்டை மையமாக வைத்து நகைச்சுவை  ட்ராமாவாக  எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகைகள்  ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்.   இந்தப்படம் மூலம்  கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிமுகமாகியிருக்கிறார்.  இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தாழி தாழி... ’ பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.  நடிகர் சிம்பு பாடியிருக்கும்  முதல் ஹிந்தி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

மஹத்தின் முதல் பாலிவுட் திரைப்படம் :  ‘Double XL’ ஐ கண்டுகளித்த சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள்..

இந்நிலையில்,  Double XL திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதனை  நடிகர்கள் சிலம்பரசன், வைபவ், ஜெய், இயக்குனர் எஸ் ஜே சூர்யா, நடன இயக்குனர் சாண்டி ஆகியோர்  கண்டுகளித்துள்ளனர். இதுகுறித்து  நடிகர் மகத் சிறப்பு காட்சியை காண வந்த சக நடிகர்களுக்கு, ''எனது முதல் ஹிந்தி படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Share this story