கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை சந்தித்த சூர்யா... வைரலாகும் புகைப்படம் !

suriya

 கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கரை நடிகர் சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அவர் கடைசியாக, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமரச்னங்களை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு வெளியான கமலின் ‘விக்ரம்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். சில நிமிடங்களே வைக்கப்பட்டிருந்த அந்த காட்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

suriya

இதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று அழைக்கப்படும் இப்படம் ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’, சுதா கொங்கராவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. 

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கரை நடிகர் சூர்யா சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

Share this story