4 நடிகர்களுக்காக தமிழ் சினிமா இயங்குகிறது - தங்கர் பச்சான்
தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அழகி.’ பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது. இளையராஜாவின் இசையில் பாடல்களும் மனதை உருக்கும்படியாக இருக்கும்.. இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதன் நினைவுகள் என்றும் போற்றத்தக்கவையே.. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கர் பச்சான் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வீரசக்தி தமிழ் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், முடக்கறுத்தான் என்ற நிகழ்ச்சியில் தங்கர் பச்சான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திரைப்படக் கலை என்பது மக்களை முன்னேற்ற, மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த கலை தற்போது அப்படி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. நான்கு நிறுவனங்களுக்காகவும், நான்கு நடிகர்களுக்காகவும் மட்டும் தான் தமிழ் சினிமா இயங்கிக் கொண்டிருக்கிறது. என அவர் காட்டமாக பேசினார்.