தீபாவளி வெளியீட்டிற்கு போட்டி போடும் தமிழ் படங்கள்...!

diwali

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர அதிக படங்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.  

பண்டிகை நாள் வெளியீடாக நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது வழக்கம். ஆனால், அதிக படங்கள் வெளியாகும்போது வணிக ரீதியாக சில இழப்புகளும் ஏற்படும். ஒரு திரைப்படம் நன்றாக இருந்து இன்னொன்று சரியாக இல்லை என்றால் கடுமையான வசூல் பாதிப்புகள் நிகழும். இதனாலேயே பண்டிகை வெளியீட்டில் நட்சத்திர நடிகர்களின் படங்களுடன் மற்ற நடிகர்கள் படங்கள் திரைக்கு வருவதில்லை.
 dude
சூழல் இப்படியிருக்க, இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. முக்கியமாக, நடிகர் சூர்யாவின் 45-வது படம், மாரி செல்வராஜின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட் ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில படங்கள் வெளியீட்டை அறிவிக்க உள்ளதால் எந்தெந்த படங்கள் வெளியாகும் என ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Share this story