ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில்  'ஜப்பான்' திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற 'ஜோக்கர்' படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'ஜப்பான்' திரைப்படம்  நடிகர் கார்த்தியின்  25வது படம் என்பதால் மிக அதிக பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

இந்நிலையில், ஜப்பான் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நவம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகளுக்கு திரையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story