‘கங்குவா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

kanguva

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கங்குவா’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திரைப்படம் வெளியாகும் நவ.14-ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.GO

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் ‘கங்குவா’படத்தை தயாரித்துள்ளது. சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் பல்வேறு மொழிகளில் பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருக்கிறது. நவம்பர் 14-ம் தேதி ‘கங்குவா’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
 GO
இந்நிலையில், இந்த படத்துக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் நாளான வரும் நவ.14ம் தேதியன்று, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Share this story