தமிழக அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவிற்கு விழா நடத்த முடிவு

ilaiyaraja

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் உள்ள ஈவன்டின் அப்போலோ அரங்கத்தில் மார்ச் 8ம் தேதி சிம்பொனி இசையை அரங்கேற்றி அசத்தினார். இதற்கு பல தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக இளையராஜா லண்டன் கிளம்பும் முன்பு அவரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை, இளையராஜா சந்தித்து பேசினார். அந்த வீடியோவை பகிர்ந்து, ‛‛லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்'' என ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story

News Hub