விக்ரமின் ’வீரதீர சூரன்’ தமிழக உரிமை விற்பனை

vikram

விக்ரமின் ‘வீரதீர சூரன்’ தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார். அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்ரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வீரதீர சூரன்’. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பினை முழுமையாக முடிக்க, படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது.
இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் மார்ச்சில் வெளியாகும் என தெரிகிறது. தற்போது இன்னும் முடியவடையாத நேரத்தில், அதற்குள் தமிழ்நாடு உரிமை விற்கப்பட்டுள்ளது. கடும் போட்டிக்கு இடையே ஃபைவ் ஸ்டார் செந்தில் பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார். இவர் தான் ‘கருடன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட பல படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. விரைவில் இதர உரிமைகள் விற்பனையையும் தொடங்க முடிவு செய்துள்ளது படக்குழு. ‘வீரதீர சூரன்’ படத்தினை முடித்துவிட்டு, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Share this story