'தி கேரள ஸ்டோரி' படம் உண்மை கதையா ?.... நிரூபித்தால் 1 கோடி பரிசு.. சவால் விட்ட பிரபல இயக்குனர் !

adam bava

'தி கேரளா ஸ்டோரி' படத்தின் கதை உண்மை என்று நிரூபித்தால் 1 கோடி பரிசு தருவதாக பிரபல இயக்குனர் அறிவித்துள்ளார். 

மலையாளத்தில் உருவாகியுள்ள 'தி கேரள ஸ்டோரி' படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இந்த படம் வரும் மே 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. 

adam bava

கேரளாவை சேர்ந்த அப்பாவி பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பிற்கு அனுப்பப்படுகின்றனர்‌. கேரளாவில் மட்டும் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. 

adam bava

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த படத்தை தடை செய்யக்கோரி கண்டன குரல்கள் எழுந்த நிலையில் நீதிமன்றம் படத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமீரின் 'உயிர் தமிழுக்கு படத்தை இயக்கிய ஆதம்பாவா, 'தி கேரள ஸ்டோரி' படத்திற்கு தனது கண்டனத்தையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “மதச்சார்பின்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டும் சில அமைப்புகள் பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்த 'தி கேரள ஸ்டோரி'. ட்ரைலரில் கூறப்பட்டுள்ளது போல கேரளாவைச்சேர்ந்த 32,000 பேர் இஸ்லாம் மதத்திற்க்கு மாறி ஐ எஸ் ஐ எஸ் ISIS குழுவில் சேர்ந்ததற்கான ஆதாரத்தை படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கொடுத்தால் அவருக்கு ரூ 1 கோடி பரிசு அளிக்கிறேன்” என்று ஆதம்பாவா சவால் விடுத்துள்ளார். 

Share this story