தயாரிப்பாளர் சங்க தேர்தல்... வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த் !

rajini

தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார். 

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை தனியார் கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இருந்த தேர்தல் மாலை வரை நடைபெற உள்ளது. 

 rajini

இந்தத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணியில் துணை தலைவர்களாக தமிழ் குமரனும், அர்ச்சனா கல்பாத்தியும், செயலாளர் பதவிக்கு கதிரேசன் மற்றும் ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர். 

இன்று நடைபெற்று வரும் தயாரிப்பாளர்கள் தேர்தலில் தயாரிப்பாளர்கள் பலரும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை இன்று செலுத்தினார். நேற்று முன்தினம் ஆந்திராவில் நடைபெற்ற என்டிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள சென்றிருந்த ரஜினி, இன்று சென்னை திரும்பிய உடனே தனது வாக்கை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story