தயாரிப்பாளர் சங்க தேர்தல்... மீண்டும் தலைவரானார் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி !
தமிழ் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான சங்கங்களில் ஒன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்திற்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
அதன்படி நேற்றே காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டனர். இதில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணியில் துணை தலைவர்களாக தமிழ் குமரனும், அர்ச்சனா கல்பாத்தியும், செயலாளர் பதவிக்கு கதிரேசன் மற்றும் ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் பாரதிராசன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரஜினி, கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நேற்று வாக்களித்தனர். இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதவிர தேர்தலில் போட்டியிட்ட துணை தலைவர், பொருளாளர் உள்ளிட்டோரின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.