சிம்பு, விஷாலுக்கு ரெட் கார்டா ?... பரபரப்பான திரையுலகம் !

red card

 சிம்பு, விஷால், யோகி பாபு உள்ளிட்ட ஐந்து நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னணி நடிகர்கள் சிலர் தயாரிப்பாளர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக சினிமா இருந்து வருகிறது. இது குறித்து நீண்ட நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. 

red card

இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் நிறைய நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். எங்களுக்கு ஒத்துழைப்பு தராத நடிகர்களுக்கு நாங்கள் இனி வேலை செய்ய மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்ட போதிலும் கால்ஷீட் கொடுக்காமல் தயாரிப்பாளர்களை இழுத்து அடித்து வருகின்றனர். அதனால் அந்த நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

red card

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்கள் யார் யார் என்ற தகவலும் கசிந்துள்ளது. அந்த பட்டியலில் நடிகர்கள் சிம்பு, விஷால், யோகிபாபு, எஸ்ஜே சூர்யா, அதர்வா உள்ளிட்டோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும், ஒத்து வராத பட்சத்தில் ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

 

Share this story