மீண்டும் தொடங்கும் தங்கலான் படப்பிடிப்பு

மீண்டும் தொடங்கும் தங்கலான் படப்பிடிப்பு

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கோலார் தங்க வயலை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் தொடங்கும் தங்கலான் படப்பிடிப்பு

மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.

மீண்டும் தொடங்கும் தங்கலான் படப்பிடிப்பு

படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் விறிவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், கேஜிஎஃப் பகுதியில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெறும் என தெரிகிறது. ஆனால், விிக்ரம் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

Share this story