எனக்கு ஆதரவாக நிற்கவில்லை- அக்ஷரா ஹாசனின் பிரேக் அப் குறித்து பதிலளித்த தனுஜ் விர்வானி

akshara hasan
அக்ஷரா ஹாசன், கமலின் இளைய மகள் ஆவார். இந்தியில் இவர் நடித்த 'ஷமிதாப்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர்  தமிழில் அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் நடித்திருந்தார். இவர் இயக்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது. அதன் பின்னர் கமல் தயாரிப்பில் நடிப்பில் வெளியான 'கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அக்ஷரா ஹாசனும் முன்னாள் கதாநாயகி ரதியின் மகனும், நடிகருமான தனுஜ் விர்வானியும் நண்பராக இருந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனுஜ் விர்வானி தான் இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்றும் தகவல் பரவியது. இதனையடுத்து இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனுஜ் விர்வானி பதிலளித்தது பின்வருமாறு, அக்ஷராவின் அந்தரங்கப் படங்கள் கசிந்தபோது எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. நான் அதைச் செய்யவில்லை என்று நீங்கள் நம்பினால்... நீங்கள் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், "என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு தனுஜ் விர்வானிக்கும் தன்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. தன்யா கருவுற்று இருப்பதால் கூடிய விரைவில் இவர்களுக்கு குழந்தை பிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story