மிரட்டலான லுக்கில் நடிகை தன்யா.. ‘ரெக்கை முளைத்தேன்’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

tanya ravichandran RekkaiMulaithen movie first look poster

நடிகை தன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெக்கை முளைத்தேன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை தன்யா. ‘பலே வெள்ளயதேவா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு பிருந்தாவனம், கருப்பன், மயோன், நெஞ்சுக்கு நீதி, ட்ரிக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

tanya ravichandran RekkaiMulaithen movie first look poster

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘ரெக்கை முளைத்தேன்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகி வரும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். 

tanya ravichandran RekkaiMulaithen movie first look poster

கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு தீசன் இசையமைத்துள்ளார். பங்கஜம் ட்ரீம் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை தன்யா மிரட்டலான லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story