“கர்பத்திற்கு பின் தான் திருமணம்” டாப்சியின் நச் பதில் – ஒரு வேளை அதுவா இருக்குமோ?

photo

பிரபல நடிகை டாப்சியிடம்  திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நச் பதில் கொடுத்து பலரையும் வியப்படைய வைத்துள்ளார்.

photo

தேசிய விருது வென்ற திரைப்படமான 'அடுகளம்' படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக கனகச்சிதமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை டாப்சி. தொடர்ந்து தமிழில் ராகவா லாரன்சின் காஞ்சனா2, அஜித்தின் ஆரம்பம், பெண்மைய்ய கதாபாத்திரத்தில் கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழை கடந்து தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வந்தார்.  தற்போது பாலிவுட் பக்கம் கொடிகட்டி பறந்து வருகிறார். இப்படி தொழிலில் கலக்கும் டாப்சி தனிப்பட்ட வாழ்கையில் என்னதான் செய்ய உள்ளார் என  ரசிகர்கள் அவரிடம் சமூகவலைதள கலந்துரையாடல் மூலமாக கேட்டதற்கு, அனைவரும் அதிரும் வகையில் பதிலளித்துள்ளார்.

photo

அதாவது, எப்போது திருமணம் டாப்சி என கேட்டதற்கு, “நான் இப்போது கர்பமாக இல்லை, அதனால் இப்போது திருமணம் இல்லை” என பதிலளித்துள்ளார். இதனை அறிந்த பலரும் என்ன டாப்சி இப்படி ஒரு பதிலை கொடுத்துள்ளார்!. ஒரு வேளை கர்பமானால்தான் திருமணம் செய்துகொள்வேன் என் கூறுகிறாரா இல்லை சமீபகாலமாக நடிகைகள் பலர் திருமணமாகாமல் கர்பமானதைதான் முதலில் அறிவிக்கின்றனர். அதனால் அவர்களை கிண்டலடிக்கதான் டாப்சி இப்படி கூறியுள்ளாரா என விவாதமாக்கி வருகின்றனர்.

Share this story