மீண்டும் இணைந்த 'ஜோ' பட கூட்டணி.. படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Rio new movie


2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக நடைப்பெற்று தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். படத்தின் போஸ் ப்ரொடக்ஷன் பணிகளை வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளனர்.

Share this story