பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ண முரளி கைது...!

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ண முரளி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் போசனி கிருஷ்ண முரளி. ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ண முரளி கடந்த ஜெகன்மோகன் ஆட்சியின் போது சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தார்.அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் குறித்து அவதூறாக பேசினார்.பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கமெண்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத், கச்சிபவுலியில் உள்ள கிருஷ்ண முரளி வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே கிருஷ்ண முரளி அறிவித்திருந்த நிலையில் அவரைக் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.