கார்த்திக்கு ஜோடியாகும் தெலுங்கு நடிகை... நலன் குமாரசாமி படத்தின் புதிய அப்டேட்

கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இருமொழிகளில் இளம் நடிகையாக நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி. ‘உப்பென்னா’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த அவர், தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் நடித்தார்.
அதன்பிறகு பாலா - சூர்யா கூட்டணியில் இணைந்த அவர், கால்ஷீட் பிரச்சனையால் வெளியேறினார். இதையடுத்து நாகசைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேநேரம் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கார்த்தி மற்றும் நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.