பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை

producer

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 


பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சவுத்ரி என்கிற கே.பி.சவுத்ரி(44 வயது). இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர்.

producer

இவர், கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பதை கண்டு, அங்கே இருந்தவர்கள் சந்தேகம் கொண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன காரணத்தால் தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story