'வீர தீர சூரன்' படத்தின் தெலுங்கு டீசர் ரிலீஸ்...

vikram

'வீர தீர சூரன்’ படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் . இவர் தற்போது சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 ஆவது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.


மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி உள்ளது. 

Share this story

News Hub