'டெஸ்ட்’ : மாதவன் கதாபாத்திர வீடியோவை வெளியிட்ட நடிகர் சூர்யா...!

டெஸ்ட்’ படத்தில் நடித்துள்ள நடிகர் மாதவனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பின்பு டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் இருந்து சித்தார்த் மற்றும் நயன்தாராவின் கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியாகியிருந்தது.
From Aayutha Ezhuthu to TEST, @ActorMadhavan always gives his Best to everything he does. Cheering for you brother! Wishing team #TEST all success as well!#Nayanthara #Siddharth @sash041075 @chakdyn @StudiosYNot @NetflixIndia pic.twitter.com/sdAo2KI3ng
— Suriya Sivakumar (@Suriya_offl) March 15, 2025
இந்நிலையில், நடிகர் மாதவனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஆயுத எழுத்து முதல் TEST வரை, மாதவன் அவரது பெஸ்ட்- ஐ கொடுத்துள்ளார். டெஸ்ட் வெற்றிபெற வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். ஆயுத எழுத்து படத்தில், சூர்யாவுடன் மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.