'மாதவன்- நயன்தாரா- சித்தார்த்' கூட்டணியில் தயாராகும் படத்தின் 'ஃபஸ்ட் லுக்' போஸ்டர்.

மாதவன்- நயன்தாரா- சித்தார்த் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
‘அலைபாயுதே’ படத்தின் மூலமாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் சால்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். அந்த வகையில் சமீபத்தில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்கிற திரைப்படத்தை இயக்கிய நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்தை திருச்சிற்றம்பலம் திரைப்பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மற்றும் சித்தார்த் கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை சசிகாந்த் இயக்கவுள்ளார். அந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘TEST’ என பெயரிட்டுள்ளனர். இதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முறைப்பதை போல ஃபஸ்ட்லுக் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த படத்தை Y Not Studios தயாரிக்கின்றனர். படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஷருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். நடிகர் ஜெய்யுடன் தனது 75வது படத்தில் கமிட்டகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.