'டெஸ்ட்’ திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ ரிலீஸ்...

சசிகாந்த் இயக்கியுள்ள 'டெஸ்ட்’ திரைப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோ ரிலீசாகியுள்ளது.
ஓய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் ‘குவாட்டர் கட்டிங்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் சசிகாந்த். தற்போது அவரே தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘டெஸ்ட்’. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில், ‘டெஸ்ட்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ்-ல் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன்தாரா மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.