நேரடியாக ஓடிடியில் வெளியானது 'டெஸ்ட்' திரைப்படம்..!
Fri Apr 04 2025 12:46:03 PM

மாதவன்- சித்தார்த் -நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா’ போன்ற படங்களை தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ’TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்தத் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.