ஜனவரியில் வெளியாகும் டெஸ்ட் திரைப்படம்

ஜனவரியில் வெளியாகும் டெஸ்ட் திரைப்படம் 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன். அந்த வகையில் சமீபத்தில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் பயோபிக்கை இயக்கி நடித்திருந்தார்.‌ இந்த படத்தின் வரவேற்பிற்கு பிறகு விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.‌இது குறித்த தகவல்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் கதைகளும் கொண்ட படத்தில் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார். மாதவனுடன் இணைந்து நடிகை நயன்தாரா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சசிகாந்த் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்கவுள்ளார்‌.  

ஜனவரியில் வெளியாகும் டெஸ்ட் திரைப்படம் 

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Share this story