'டெஸ்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு...!

மாதவன்- சித்தார்த் -நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா’ போன்ற படங்களை தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ’TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
TEST trailer out now.
— Netflix India (@NetflixIndia) March 25, 2025
How far will they go for their dreams? Only a TEST will tell.
Watch TEST, starring @ActorMadhavan, Nayanthara, and Siddharth, out 4 April in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, only on Netflix! pic.twitter.com/rKEHJ9BOuc
மேலும் படத்தின் கதாப்பாத்திர அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டது. சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். நயன் தாரா, மாதவனின் மனைவி குமுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.